Tuesday, June 27, 2006

முகவுரை

எனக்கு
அறிமுகமே தேவையில்லை!
ஆயினும் என்னை பிரகடனப்படுத்தி விடுகிறேன்.

என்னை
நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
நானும்
உங்கள் அனைவரையும் அறிவேன்.

அனுதினமும்
பரஸ்பரம் இருவரும்
விவாதித்துக்கொண்டு தானிருக்கின்றோம்.
ஆனால்
சூழ்நிலைச் சிறையில் சிக்குண்டு
கைதியாய் நீங்கள்...
நானோ
நிழலாய் உங்களோடு.

உங்களின் பார்வை
கிணற்றுவாழ் தவளையொப்ப
சுறுங்கிவிட்டது...?!

உங்களுக்கு,
எது நடந்தால் நமக்கென்ன...
நாம் வாழ்கிறோமே- என்ற
மனநிலை ஓங்கிவிட்டது...
தட்டிக்கேட்கும் தைரியம் குறைந்து விட்டது.
ஒழுக்க சிந்தனைகள் மழுங்கிவிட்டது.
கடமை உணர்வை
அடகுவைத்துவிட்டீர்கள்...

இனியும்
நான் உங்களோடிருந்தால்...?!!!
நான் உங்களின் மனசாட்ச்சியே அல்ல?!

இனி நான்
உங்களின் அழுத்தப்பட்ட
உணர்வுகளின் பிரதிபலிப்பு.
மறைக்கப்பட்ட உண்மைகளின் வினா?!
சமூக அவலங்களுக்கோர் சாட்டையடி.