Wednesday, August 30, 2006

நாதியற்றவர்கள்!...


படத்தை கிளிக்செய்து செய்தியை படிக்கவும்,
நன்றி: தினமலர்.

Saturday, August 19, 2006

நெஞ்சு பொருக்குதில்லையே!...

"நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் "


பொதுவாகவே எனக்கு போலீஸ்காரர்கள் மீது பரிதாப உணர்ச்சியும் மரியாதையும் உண்டு. பரிதாப உணர்ச்சிக்கு காரணம் ஓய்வு ஒவிச்சல் இல்லாத அவர்கள் வேலை. மரியாதைக்கு காரணம் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அவர்களுக்குள்ள கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுவதன் காரணமாகவே நாம் நம் அன்றாட பணிகளில் நம் கவனத்தை செலுத்தி பணியாற்றவும் பயமின்றி வாழவும் முடிகின்றது.
ஆனால் அவர்கள் எவ்வளவுதான் சிறப்பாக பணியாற்றினாலும் போலிஸில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் உள்ள புல்லுருவிகளின் செயலால் மொத்தக் காவல்துறையும் கழங்கப்பட்டு நிற்கின்ற இழி நிலை ஏற்படுகின்றது.
காவல் துறையினர் செய்யும் நல்ல காரியங்கள் மறந்து அவர்களை மக்கள் இழிவாக பார்க்க சிலகாரணங்கள்,
  • லஞ்சம்.
  • குறிப்பாக ட்ராபிக் போலீஸாரின் அரட்டல் உருட்டல் கையேந்தல்.
  • புகார் தர வரும் அப்பாவிகளிடமும் பரிவின்றி நடந்து கொள்ளும் இணக்கமில்லாத குணம்.
  • காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது.

இன்னும் பல காரணங்கள்.

போலீஸ்காரர்களின் இந்த லீலைகளை கட்டுப்பதுத்த முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.
  • நானும் நீயும் திருந்த வேண்டும்.
  • நாம் சட்டத்தை மீராமல் இருக்க நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • நாம் தவறு செய்ய நேர்ந்தால் அதற்கான தண்டணையை ஏற்கும் மனோபாவம் வேண்டும்.
  • தவறு செய்யும் போலீஸ்காரர்கள் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் செய்யும் துணிச்சல் வேண்டும்.
  • நேரடியாக சென்று புகார் செய்ய முடியாத போது புகார் கடிதம் மூலமாகவாவது செய்வது நன்று.

இதெல்லாம் செஞ்சி என்ன பிரயோஜனம்?, நடவடிக்கை எடுக்கவா போகின்றார்கள் என நீங்கள் வினவுவது எனக்கு கேட்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் புகார் செய்யும் பட்சத்தில் அது உண்மையான புகாராக இருந்தால் அந்த நீங்கள் குறிப்பிடும் லஞ்சலாவண்ய பேய் சில காலமாவது வீட்டிற்கு போவது உறுதி.

இதை நாம் செய்யத்துணியாத வரை நாம் புலம்பித்திரிய வேண்டியது தான்.