"நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் "
பொதுவாகவே எனக்கு போலீஸ்காரர்கள் மீது பரிதாப உணர்ச்சியும் மரியாதையும் உண்டு. பரிதாப உணர்ச்சிக்கு காரணம் ஓய்வு ஒவிச்சல் இல்லாத அவர்கள் வேலை. மரியாதைக்கு காரணம் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அவர்களுக்குள்ள கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுவதன் காரணமாகவே நாம் நம் அன்றாட பணிகளில் நம் கவனத்தை செலுத்தி பணியாற்றவும் பயமின்றி வாழவும் முடிகின்றது.
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் "
பொதுவாகவே எனக்கு போலீஸ்காரர்கள் மீது பரிதாப உணர்ச்சியும் மரியாதையும் உண்டு. பரிதாப உணர்ச்சிக்கு காரணம் ஓய்வு ஒவிச்சல் இல்லாத அவர்கள் வேலை. மரியாதைக்கு காரணம் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அவர்களுக்குள்ள கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுவதன் காரணமாகவே நாம் நம் அன்றாட பணிகளில் நம் கவனத்தை செலுத்தி பணியாற்றவும் பயமின்றி வாழவும் முடிகின்றது.
ஆனால் அவர்கள் எவ்வளவுதான் சிறப்பாக பணியாற்றினாலும் போலிஸில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் உள்ள புல்லுருவிகளின் செயலால் மொத்தக் காவல்துறையும் கழங்கப்பட்டு நிற்கின்ற இழி நிலை ஏற்படுகின்றது.
காவல் துறையினர் செய்யும் நல்ல காரியங்கள் மறந்து அவர்களை மக்கள் இழிவாக பார்க்க சிலகாரணங்கள்,
- லஞ்சம்.
- குறிப்பாக ட்ராபிக் போலீஸாரின் அரட்டல் உருட்டல் கையேந்தல்.
- புகார் தர வரும் அப்பாவிகளிடமும் பரிவின்றி நடந்து கொள்ளும் இணக்கமில்லாத குணம்.
- காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது.
இன்னும் பல காரணங்கள்.
போலீஸ்காரர்களின் இந்த லீலைகளை கட்டுப்பதுத்த முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.
- நானும் நீயும் திருந்த வேண்டும்.
- நாம் சட்டத்தை மீராமல் இருக்க நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
- நாம் தவறு செய்ய நேர்ந்தால் அதற்கான தண்டணையை ஏற்கும் மனோபாவம் வேண்டும்.
- தவறு செய்யும் போலீஸ்காரர்கள் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் செய்யும் துணிச்சல் வேண்டும்.
- நேரடியாக சென்று புகார் செய்ய முடியாத போது புகார் கடிதம் மூலமாகவாவது செய்வது நன்று.
இதெல்லாம் செஞ்சி என்ன பிரயோஜனம்?, நடவடிக்கை எடுக்கவா போகின்றார்கள் என நீங்கள் வினவுவது எனக்கு கேட்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் புகார் செய்யும் பட்சத்தில் அது உண்மையான புகாராக இருந்தால் அந்த நீங்கள் குறிப்பிடும் லஞ்சலாவண்ய பேய் சில காலமாவது வீட்டிற்கு போவது உறுதி.
இதை நாம் செய்யத்துணியாத வரை நாம் புலம்பித்திரிய வேண்டியது தான்.

5 comments:
oops a nice posting.. good Sir. well are you a police too?
தெரிஞ்சவங்களுக்கும் நம்ம வலைப்பூ பற்றி முடிஞ்சா சொல்லுங்க.
neegal polcie a porikkiya(summa )
sir ungal padhivu sooper ..nanum idhu polavaey niraya time think panni irukane..naam thirundhinaal oliya police thirundha vaaipillai..nertu kuda paarunga numma thambaram vidhya theatre pakkthila oru panjaabi thaaba iruku anga oru polcie patrol avndhu ninadhu ..driver horn adicchaar..oru paiyan kadayilirundhu vandhi pakkam ponan..vandil irundha polcie oruthr ennmo keetaar..evanum oru periya paarce(saptahi) kondu poi koduthaan.. appuram police vadni kilambi poiduthu..andha paiyan kaasu tharuvaangalanu edir parthu ninan..ennaku migavum varuthamagi vittadhu numma policekakargal sidhadhai paarthu..neenga enna solreenga idhuku? en padhivil padhil sonna nalla irukum sir
நண்பர் கார்த்திக் பிரபு, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக உற்று நோக்கியிருந்தால் அந்த போலீஸ் காரர்களின் செயல் சரியா? தவறா? என்று நீஙகளே முடிவு செய்து இருக்கலாம். ஒருவேளை அந்த போலீஸார் அந்த கடையின் வாடிக்கையாளராகக் கூட இருந்து இருக்கலாம். பொருளைக்கொடுத்த பின் அந்த சிறுவன் மரியாதை நிமித்தமாகக் கூட அந்த போலீஸார் புறப்படும் வரை நின்று இருக்கலாம். நீங்கள் அந்த சிறுவனிடம் இது பற்றி விசாரித்தீர்களா?. உங்களின் சந்தேகம் போல் உண்மையிலேயே போலீசார் ஓசியில் காசு கொடுக்காமல் வாங்கிச்சென்று இருந்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள். இது பற்றி மேலதிகாரிகளுக்கோ அல்லது முதலமைச்சர் தனிப்பிரிவிற்கோ புகார் அனுப்பினீர்கள் என்றால் அந்த போலீஸார் மீது தவறிருந்தால் அவர்கள் தண்டனை பெறுவது உறுதி. புகார் செய்ய போலீசாரின் பெயர் கூட தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பவம் நடந்த இடத்தையும் நேரத்தையும் குறிப்பிட்டால் போதுமானது.
இவர்கள் நிலமை மொத்தத்தில் கொஞ்சம் கஷ்டமான வேலை தான்.அந்த டிராபிக் புகை,சத்தத்தில் மூக்கு கவசம் இல்லாமல்,வெய்யிலில் நின்று கொண்டு...நாம் சக மனிதனை எப்படியெல்லம் வேலையில் ஈடுபடுத்துகிறோம் என்று பார்த்தால் பரிதாப உணர்வே உண்டாகுகிறது.இவர்கள் சம்பளமும் மற்றவர்களை பார்க்கும் போது கம்மி தான்.லீவு நினைத்த நேரத்தில் எடுக்க முடியாது.
மொத்ததில் உடுப்பு மாத்திரமே கம்பீரமாக இருக்கிறது.
அதற்காக அடாவடியாக/லஞ்சம் வாங்கிதான் ஆக வேண்டுமா என்றால்...இல்லை,அதை அவர்கள் செய்யமுடியாத அளவுக்கும் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
மேற்படிக்கு இங்கே பார்க்கவும்
Post a Comment