ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV.
விஜய் டிவி நடத்தி வந்த நடனப் போட்டி நிகழ்ச்சி ஜோடி நம்பர் – 1 ஐத் தொடர்ந்து சன் டீவி, கலைஞர் டீவி போன்றவையும் அதே போன்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து விட்டன. ஒவ்வொறு டிவி நிறுவனத்தினரும் கணிசமான தொகையை பரிசாக அறிவித்து நிகழ்ச்சியும் ஜெஜெ என நடந்து கொண்டிருக்கின்றது.
இதில் கலைஞர் டிவி நடத்தும் நடன நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நடிகை சிம்ரன் ஆகியோர் இருந்து வந்தனர். என்ன காரணத்தாலோ திடீரென சிம்ரன் நடுவர் பதவியிலிருந்து நின்றுவிட (or) நிறுத்தப்பட்டுவிட நடிகை நமீதா நடுவர் இருக்கையைப் பிடித்துக்கொண்டார். எந்த நடிகை நடுவரா இருந்தா உனக்கென்னெய்யா வந்தது என நீங்கள் கேட்பது புரிகின்றது.
நமீதா நடுவராக வந்த நாளில் இருந்து அவரது உடை நம் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. அதுவும் நேற்று 21.10.2007-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நமீதா அணிந்து வந்திருந்த பேபி பிராக், மன்னிக்கவும் சீதுரூ பேபி பிராக் மனதை ரணப்படுத்தியது என்பதோடு அவர் அந்த உடையை உடுத்திக்கொண்டு உடலை அசைக்க முடியாமல் அசைத்தது ஆபாசத்தின் எல்லை....என்றே சொல்ல வேண்டும்.
கலைஞர் டீவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை கலைஞர் பார்த்து ஒப்புதல் அளித்தப்பின் தான் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பது பத்திரிகை செய்தி. அப்படியிருக்க இந்த நிகழ்ச்சியையும் கலைஞர், தமிழ் பண்பாட்டுக் காவலர் பார்த்து இரசித்து அதன்பின் தான் ஒளிபரப்பினார்களா?... அல்லது பண்பாட்டுக் காவலரின் கண்களில் காட்டப்படாமலேயே ஒளி பரப்பிவிட்டார்களா?....
இந்த நிகழ்ச்சியை கலைஞர் பார்த்து இரசித்து அதன் பின் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டு இருந்தால் வாழ்க தமிழ், வாழ்க தமிழர் பண்பாடு, நீடூடி வாழ்க தமிழ் பண்பாட்டுக் காவலர்.
இந்த நிகழ்ச்சியை கலைஞர் கண்களுக்கு காட்டாமலேயே ஒளி பரப்பியிருந்தார்களானால் நிகழ்ச்சியின் தரத்தை கண்காணித்து தமிழ் காவலர் தமிழனின் மானத்தை கப்பலேற்றாமல் இருக்க ஆவன செய்வது நல்லது. (நான் மட்டுமா என் டீவில காட்டுரேன்... ஊருல உள்ளவன்லா காட்ரான்பா என பதில் கூறிவிடாதீர்கள் தமிழ் காவலரே....)
கலைஞர் டீவி நிர்வாகத்திற்கும் கலைஞருக்கும் சில கேள்விகள்:
1. சிம்ரன் ஆடைகுறைப்பு செய்யாததனால் தான் அவரை நீக்கினீர்களா?...
2. நிகழ்ச்சியில் ஆடுபவர் ஆடைகுறைத்தால் பரவாயில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம், நடுவரையே ஆடைகுறைப்பு செய்ய வைப்பது முறையா?.
நமீதாவிற்கு சில அறிவுறுத்தல்கள்.
1. Miss. நமீதா நடுவராக மட்டும் இருந்தால் போதாது. நடுவருக்கான கண்ணியத்தைக் காக்கும் உடைகளையும் அணியக்கற்றுக் கொள்ளுங்கள்.
2. தமிழில் பேச முயன்றால் மட்டும் போதாது. தமிழ் கலாச்சாரப்படி தமிழ் நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளப்பழகுங்கள்.
Monday, October 22, 2007
ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV....
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
//பண்பாட்டுக் காவலரின் கண்களில் காட்டப்படாமலேயே ஒளி பரப்பிவிட்டார்களா?....//
ஞானி சொன்னது போல் கலைஞருக்கு வயசாகி...இதையெல்லாம் கூர்ந்து கவனிக்க முடியாமல் போய்விட்டதோ !
:)
அடடா போனாவராம் அப்பிடியா நமீதா வந்தார்....பார்காமல் போய்விட்டமே.. மக்கள் தொலைக்காட்சி தமிழிசை ஒளிப்ரப்பிய நேரதில் ஒளிபரபியிருப்பர்கள் பொல அதுதான் எனக்கு பார்க்க கிடைக்கவில்லை.
அது என்னங்க தோழரே ஆடுறவங்க உடுதலாம் நடுவர் உடுத்தக் கூடாது??? வடமொழி டிவி ல எல்லம் நடுவர்களி ஆடையே அதிக கவர்ச்சியா இருக்கு.நம்ம நமீ வடமொழிப் பொண்ணு நாமதான் நம்ம நமீக்காக இதயெல்லம் பொறுத்துக்க வேணும்.
உங்களுக்கு கவ்ர்ச்சி நடனம் வேணும் ஆன நடுவர் கவர்ச்சியா வந்த கொஞ்சம் இடிக்குது. தன்னோட தங்கச்சிய சுடிதாரில் உலாவ விட்டு காதலியை உள்ளாடையோடு உலாவைடும் விஜய.டி.ராஜேந்தர் படம் மாதிரியல்லவா இருக்கு.
நமீ டோண்டு வொறி யூ கண்டினியூ தமில் நாட்டுக்காரன் வித் யூ....:)
ஏங்க கலைஞர் தான் இதெல்லாம சினிமா கலைஞர்களின் பாராட்டு விழாவில்் முன் வரிசைலயே உட்கார்ந்து பார்த்தவராச்சே. . . . . ?
paarththunga.kadasile idhukkum paarppanargaldhan kaaranam nu ezhudhidapporanga.silaper idhukkagave irukkanga
T.V.Radhakrishnan
/////தமிழில் பேச முயன்றால் மட்டும் போதாது. தமிழ் கலாச்சாரப்படி தமிழ் நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளப்பழகுங்கள்.////
சரியான வினா???, நமிதா மட்டுமல்ல யாராக இருந்தாலும் நடுவருக்குரிய பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும். தமிழையும், பண்பாட்டையும் கட்டிக்காப்பதாக சொல்பவர்களுக்கும் தொடை தெரிகின்ற நடனங்கள் தேவையாக இருக்கின்றது. என்ன கொடுமை நண்பரே….
சத்ரியன்
கலைஞர் டிவி கடை பரப்பியிருப்பது வியாபாராம் பண்ணத்தான்...தமிழ் வளர்க்க அல்ல...அதனால் அந்தட் டி வி இப்படியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது ஆச்சரியமல்ல. இப்படியெல்லாம் பதிவு போட்டு தமிழர்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் நிறுத்திப்புடாதீங்க...ஆமாம்..உங்க பதிவை படிச்சுட்டு நமிதா அடுத்த எபிசோடுல புடவைய கட்டிக்கிட்டு வந்து நிக்கப் போராங்க
பதிவை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்த மதிப்புக்குரிய அன்பர்கள் கோவி.கண்ணன், சோமி, வெங்கட்ராமன், T.V.இராதாகிருஷ்ணன், மருதமூரான், சரவணகுமார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
Post a Comment